இந்தியா

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிப்பு

DIN

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் சார்ந்த புதிய பாடப்பிரிவுகள் மட்டும் தொடங்க அனுமதி அளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

A.I, MACHINE LEARNING உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 2024 வரை ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், மாணவர் சேர்க்கை குறைவால் தற்போது 443 கல்லூரிகள் உள்ளன.

2018ம் ஆண்டு ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான அமைக்கப்பட்ட குழு பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளால் 2022 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதித்தது.

இந்நிலையில் அதே நிலை தொடர்வதால் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT