முகப்பு
இந்தியா

குவாஹாட்டி அரசு விருந்தினர் மாளிகையில் மரக்கன்றுகளை நட்டார் ஜெ.பி.நட்டா!

குவாஹாட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா  கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகளை நட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
கோப்புப்படம்
பகிர்:

குவாஹாட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா  கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகளை நட்டார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், ஜெ.பி.நட்டா கட்சி அலுவலகத்தைத் திறந்து வைப்பதோடு, கானாபாராவில் உள்ள கால்நடை விளையாட்டு மைதானத்தில் கட்சி ஊழியர்களிடம் உரையாற்றுகிறார். 

முன்னதாக, புதிய மாநிலத் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் பாபேஷ் கலிதாவுடன் முதல்வர் கட்சி கொடியை ஏற்றிவைத்தார். கொடியேற்றத்திற்குப் பிறகு முதல்வர் ஹிமந்த சர்மா பாஜக மூத்த நிர்வாகிகளின் கால்களையும் கழுவினார். மூத்தவர்களுக்கு மரியாதை காட்டுவது, இந்திய கலாசாரத்தின் நெறிமுறை, எங்கள் கட்சியின் பாரம்பரியத்தின் அடிப்படை என்றும் அவர் கூறினார். 

அசாமில் எங்கள் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவிய நமது மரியாதைக்குரிய மூத்த பாஜக நிர்வாகிகளின் கால்களைக் கழுவியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →