FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல்: 6 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 பிப்ரவரி 2024, 4:01 pm IST
(கோப்புப்படம்)
பகிர்:

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ரூ.350 மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் பாகிஸ்தானில் பெரிய கடத்தல் வியாபாரி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக குஜராத் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இந்தியக் கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து நடத்திய சோதனையில், சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சாகர் என்ற பாகிஸ்தான் கப்பலில் ரூ.350 கோடி மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

குஜராத் ஏ.டி.எஸ்., தகவலைப் பெற்று, நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ததுள்ளது.  6 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டுள்ளனர் என்று குஜராத் டிஜிபி கூறினார்.

முன்னதாக, கடந்த செப்.14ல் பாகிஸ்தான் படகு ஒன்றில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments