பிரமோத் சாவந்த் 
இந்தியா

முலாயம் சிங் மறைவு: கோவா முதல்வர் இரங்கல்!

உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த 82 வயதான யாதவ், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை காலமானார். 

அவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த ஆத்மாவுக்கு இறைவன் சாந்தி அருளட்டும். ஓம் சாந்தி என்று  சாவந்த் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானேவும் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியையும், பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வலிமையையும் இறைவன் தரட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT