சஞ்சய் ரெளத் 
இந்தியா

சஞ்சய் ரெளத்துக்கு அக். 17 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரெளத், அவரது குடும்பத்தினா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர். 

பின்னர், மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அக்டோபர் 10ஆம் தேதியுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 17 வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT