தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி
புனேவைச் சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.
மும்பை: புனேவைச் சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.
வங்கியில் கடன் வழங்க போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அக்டோபர் 10 முதல் தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி தனது வணிகத்தை நிறுத்துகிறது.
வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து (டிஐசிஜிசி) 99 சதவீத டெபாசிட்தாரர்கள் தங்களது முழு டெபாசிட் தொகையையும் பெற உரிமை உண்டு. செப்டம்பர் 14ஆம் தேதி வரை, மொத்த காப்பீடு டெபாசிட்களில் ரூ.152.36 கோடியை டிஐசிஜிசி செலுத்தியுள்ளது.
கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.