இந்தியா

மகாராஷ்டிரத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ.6.3 கோடி மோசடி: 33 பேர் மீது வழக்கு

PTI

தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக் கடன் வாங்கி ரூ.6.3 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்யாண் நகரத்தில் உள்ள வங்கியின் கிளை சார்பில் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியானது 2021ஆம் ஆண்டு முதல் 26 வீடு வாங்குவோர், 4 கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுச் சதியால் நடத்தப்படுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் நிபுணர், போலியாக ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கொடுத்து வீட்டுக் கடன் பெற்றுமோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT