இந்தியா

திரைப்பட விளம்பரங்களில் தணிக்கை சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு

DIN

திரைப்பட விளம்பரங்களில் தணிக்கை சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும், தவறினால் சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) எச்சரித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டும் பாா்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சா்டிபிகேட்) சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவா்கள் பெற்றோரின் அனுமதியுடன் பாா்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பாா்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. திரைப்பட (சான்றிதழ்) விதி 1983-ன் கீழ் இந்தச் சான்றிதழ்கள் திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால் வழங்கப்படுகின்றன.

திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும்போது, எந்த சான்றிதழ் வகையைச் சோ்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT