இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் தில்லி அரசுப் பள்ளிகள்: கேஜரிவால்
இந்தியப் பள்ளிகளின் தரவரிசை பட்டியலில் தில்லி அரசுப் பள்ளிகள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பள்ளிகளின் தரவரிசை பட்டியலில் தில்லி அரசுப் பள்ளிகள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரையில்,
எனது கல்விக்குழு குறித்து நான் பெருமிதம் அடைகிறேன். தேசிய தலைநகரில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகள், நாட்டிலேயே மாநில அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளன.
எஜுகேஷன் வேர்ல்ட் வெளியிட்டுள்ள தரவரிசையில், செக்டார் 10, துவாரகாவில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சேர்ந்தவையாகும்.
இது ஒரு அற்புதமான சாதனை! தில்லி அரசின் கல்விக் குழுவுக்கு எனது பாராட்டுக்கள் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.