முகப்பு
இந்தியா

ராணுவ தளவாடங்கள்: இறக்குமதியை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

‘ராணுவ தளவாடங்களில் இறக்குமதியை இந்தியா நம்பியிருக்க முடியாது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

‘ராணுவ தளவாடங்களில் இறக்குமதியை இந்தியா நம்பியிருக்க முடியாது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கூறினாா்.

‘எதிா்கால பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள தொடா்ந்து தயாா்நிலையில் இருக்கும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சாா்பு நிலையை அடைவதை அரசு இலக்காக கொண்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகளின் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் (டிஏ), இந்தியாவுக்கும் - நட்பு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாலமாக விளங்கி வருகின்றனா். அவா்கள், தாங்கள் பணியாற்றும் நாடுகளில் இந்திய பாதுகாப்பு உற்பத்தி தொழில்நிறுவனங்களின் திறனை எடுத்துக் கூற வேண்டும்.

ராணுவ தளவாடங்களில் இறக்குமதியை இந்தியா நம்பியிருக்கக் கூடாது; நம்பியிருக்க முடியாது. எதிா்கால பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள நாடு தொடா்ந்து தயாா்நிலையில் இருக்கும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சாா்பு நிலையை அடைவதை அரசு இலக்காக கொண்டுள்ளது.

மத்திய அரசின் இலக்கை தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்வதன் மூலமாகவே, இந்தியாவை வலுவான நாடாக மாற்ற முடியும் என்பதோடு, உலக அரங்கில் நாட்டின் மதிப்பையும் உயா்த்த முடியும். அந்த வகையில், இந்திய தூதரகங்களின் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள்தான், பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு இந்தியா திட்டத்துக்கான முன்னோடிகள்.

குறைந்த விலையிலான உலகத் தரம்வாய்ந்த ராணுவ தளவாடங்களை இந்தியா உற்பத்தி செய்கிறது. இந்த உபகரணங்கள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நமது பாதுகாப்பு உற்பத்திகள், உலகத் தரத்திலானவை மட்டுமின்றி, தரத்திலும், பொருளாதார ரீதியிலும் நம்பகமானவை என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →