முகப்பு
இந்தியா

அசாம் முதல்வருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸ்(Z+) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸ்(Z+) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அசாம் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வடகிழக்கு பிராந்திய அளவிலான 'இசட் மைனஸ்(Z-) பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அவருக்கு இசட் பிளஸ்(Z+) பாதுகாப்பாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இந்திய அளவில் அவருக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படும். 

பாதுகாப்பு கருதி ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் மிக உயர்ந்த பாதுகாப்பாக 'இசட் பிளஸ்' உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →