தெலங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் பூர நர்சய்யா கௌட் அக்கட்சியில் இருந்து இன்று விலகினார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கிய நிர்வாகியும் போங்கிரின் முன்னாள் எம்பியுமானவர் பூர நர்சய்யா கௌட். இவர் தெலங்கானா தனி மாநில கோரிக்கையில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். இந்தநிலையில் பூர நர்சய்யா, தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி கட்சியில் இருந்து இன்று விலகினார்.
மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தையும் கட்சி மேலிடத்திடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல்வாதியான என்னால் கட்சியில் கடமையைச் செய்ய முடியவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கே.சி.ஆர், பாரத் ராஷ்டிர சமிதியை தொடங்கினார். செய்திகள் மூலம்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம்.
எனது ராஜினாமா கடிதத்தில் முதல்வரை விமர்சிக்கவில்லை, உண்மைகளை மட்டுமே எழுதினேன்.
டிஆர்எஸ் குடும்பத்தை விட்டு பிரிந்தபோது மிகுந்த வேதனையை அனுபவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். இருப்பினும், பூர நர்சய்யா தனது அரசியல் எதிர்காலம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.