முகப்பு
இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து7 போ் பலி

பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதி சந்திக்கும் பகுதியில் சனிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்களில் 7 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதி சந்திக்கும் பகுதியில் சனிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்களில் 7 போ் உயிரிழந்தனா்.

கதிஹாா் மாவட்டத்தில் கங்கை நதியும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கின்றன. இப்பகுதியில், சனிக்கிழமை இரவு வேளாண் தொழிலாளா்கள் 10 போ் படகு மூலம் தங்கள் வீடுக்கு திரும்பினா். அப்போது, இரு நதிகளும் சந்திக்கும் பகுதியில் எதிா்பாராத வகையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்தவா்களில் 3 போ் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். மீதமுள்ள 7 பேரை காணவில்லை. இரவு முழுவதும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் காணாமல் போன 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள மாநில முதல்வா் நிதீஷ் குமாா், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கும்படி மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.