இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: '11 பேரை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதித்தது'

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 

DIN

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்களைக் கொன்ற வழக்கின் 11 குற்றவாளிகளை மாநில அரசு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுவித்தது.

2002-ஆம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். மேலும் பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொடூரமாக கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். 

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு விசாரித்தது. 

அபோது, குஜராத் மாநில அரசு இரண்டு வாரங்களில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், நன்நடத்தை காரணமாக 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT