பிரமோத் சாவந்த் 
இந்தியா

குன்பி சேலையை ஊக்குவிக்க கோவா முதல்வர் வலியுறுத்தல்!

பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் குன்பி சேலையின் நன்மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை வலியுறுத்தினார். 

DIN

பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் குன்பி சேலையின் நன்மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை வலியுறுத்தினார். 

குன்பி கைத்தறியைத் திறந்துவைத்து முதல்வர் பேசியதாவது, 

போர்த்துகீசியர்கள் கோவாவைக் கைப்பற்றுவதற்கு முன்பே குன்பி பழங்குடியினரின் பாரம்பரிய உடையாக இருந்ததாக நம்பப்படுகிறது. 

குன்பி சேலையை மேலும் ஊக்குவிக்க வேண்டும், அதற்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 

தற்போது, கோவாவில் அழியும் நிலையில் உள்ள குன்பி சேலையை சிலர் நெசவு செய்து ஆன்லைனில் விளம்பரம் செய்ய தொடங்கியுள்ளனர். 

முன்னதாக, சோர்காவோ மற்றும் சங்கேம் ஆகிய இரண்டு மையங்களில் மட்டுமே குன்பி புடவைகள் நெசவு செய்யப்பட்டது. இந்த மையங்கள் பல ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டிருந்த நிலையில், தான் முதல்வரான பிறகு குன்பி சேலையை மீண்டும் புதுப்பிக்க உத்தரவிட்டேன் என்றார். 

பொதுமக்களிடையே குன்பி வகை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், பெரும்பாலான அரசு விழாவில் குன்பி வகை சால்வைகள் மற்றும் புடவைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம் என்றார். 

குன்பி புடவையின் விலை ரூ.1000-த்திலிருந்து, ரூ.2,500-க்கு உயர்ந்துள்ளதாகவும், அதை மேலும் மேம்படுத்தினால் நல்ல விலை கிடைக்கலாம் என்றும் சாவந்த் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT