முகப்பு
இந்தியா

'அம்மா அனுப்பியும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவில்லை' - ராகுலின் வைரல் விடியோ!

தன்னுடைய அம்மா சோனியா காந்தி தனக்கு சன்ஸ்க்ரீன் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அதனை பயன்படுத்தவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

தன்னுடைய அம்மா சோனியா காந்தி தனக்கு சன்ஸ்க்ரீன் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அதனை பயன்படுத்தவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம்  மேற்கொண்டு வருகிறார். தற்போது கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள அவர் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் நடைப்பயணத்தின் இடையே ஓய்வின்போது ராகுல் காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார். 

அந்தவகையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு விடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மக்களுடன் உரையாடும்போது ஒருவர் ராகுலிடம், 'நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்க, ராகுல் அதற்கு, 'என்னுடைய அம்மா எனக்கு சன்ஸ்க்ரீன் அனுப்பியுள்ளார். ஆனால், அதனை நான் பயன்படுத்தவில்லை' என்று கூறி தோலின் நிறத்தைக் காட்டுகிறார். 

மேலும் நடைப்பயணத்தின் இடையே ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, 'தொலைபேசியில் என்னுடைய அம்மா, தங்கையிடம் பேசுவேன். என்னுடைய நண்பர்களிடம் பேசுவேன். புத்தகம் படிப்பேன்' என்று கூறுகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →