முகப்பு
இந்தியா

தீபாவளி: தில்லியில் 13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

இந்த மாதத்தில் 13,700 கிலோ பட்டாசுகளை தில்லி காவல்துறையினர் பறிமுதல் செய்து 75 வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: தில்லி காவல் துறையினர் அக்டோபர் மாதத்தில் 13,700 கிலோ பட்டாசுகளைப் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 19ஆம் தேதி வரை விற்பனைக்காக இருந்த 13,767 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 75 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பட்டாசு விற்பனை, சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கு எதிராக தில்லியின் பல பகுதிகளில் காவல் துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பட்டாசு விளைவிக்கும் தீங்கு குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறோம். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள் மற்றும் விநியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →