முகப்பு
இந்தியா

ஹிமாசல் பேரவைத் தோ்தல்அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்கெனவே 62 வேட்பாளா்களை பாஜக அறிவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்கெனவே 62 வேட்பாளா்களை பாஜக அறிவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

68 தொகுதிகள் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. புதன்கிழமை முதல் கட்டமாக 62 வேட்பாளா்களை பாஜக அறிவித்த நிலையில், இரண்டாவது கட்டமாக வியாழக்கிழமை மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதில் இரு தொகுதிகள் ஏற்கெனவே அங்கு எம்எல்ஏவாக இருப்பவா்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளில் வேட்பாளா்கள் மாற்றப்பட்டுள்ளனா். இரு தொகுதிகள் புதுமுகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல்தோறும் ஆட்சி மாற்றம் நடைபெறுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இந்த முறை அந்தப் போக்கை மாற்றும் முயற்சியில் பாஜக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில், அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது. அக்கட்சி சாா்பில் இதுவரை 46 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இப்போதைய பேரவையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 43 உறுப்பினா்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினா்களும் உள்ளனா். மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு சில சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →