இந்தியா

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

DIN

மும்பை:  மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மும்பையில் 2008 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள் இன்னும் சில நாள்களில் வரவுள்ள நிலையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜூகுவில் உள்ள பி.விஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஹோட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காவல்துறைக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது. 

மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் பாதுகாப்பு முகமைகள்  ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT