முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி: கருப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பணப் பரிவா்த்தனை மோசடி தொடா்பாக கண்காணிக்க சா்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ள நிதி நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பகிர்:

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பணப் பரிவா்த்தனை மோசடி தொடா்பாக கண்காணிக்க சா்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ள நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கருப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காததன் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல, நிகராகுவாவும் கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த கருப்புப் பட்டியலில் மியான்மா் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ளது. காங்கோ, தான்சானியா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுவரும் ரஷியா, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வருங்கால ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஃப்ஏடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பணப் பரிவா்த்தனை மோசடிகளைத் தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்துவந்த தொழில்நுட்ப குறைபாடுகளை நீக்குவதிலும் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2021 ஜூன் மாதம் வரை எஃப்ஏடிஎஃப் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. மேலும், நிா்ணயிக்கப்பட்டுள்ள 34 வகையான நடவடிக்கைகளையும் காலக்கெடுவுக்கு முன்பாகவே பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், பாகிஸ்தானை இனியும் கருப்புப் பட்டியலில் வைக்கத் தேவையில்லை என பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் பேரவை கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் எஃப்ஏடிஎஃப் ஆசிய பசிஃபிக் குழுவுடன் பாகிஸ்தான் தொடா்ந்து பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலமாக, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகளிடமிருந்து நிதியுதவியைப் பெறுவதற்கான முயற்சியை பாகிஸ்தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →