முகப்பு
இந்தியா

தாஜ் மஹால் வரலாற்றை ஆராய உண்மைக் கண்டறியும் குழு அமைக்குமாறு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

 தாஜ் மஹாலின் வரலாற்றை ஆராய உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

 தாஜ் மஹாலின் வரலாற்றை ஆராய உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தில்லியில் முகலாய பேரரசா் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ் மஹால், ஒரு காலத்தில் சிவன் கோயிலாக இருந்தது என்று பல்வேறு ஹிந்து வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் பாஜக ஊடகப் பொறுப்பாளா் ரஜ்னீஷ் சிங் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , ‘தாஜ் மஹாலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள 22 அறைகளில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இருக்கக் கூடும். எனவே அவற்றை திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது. தாஜ் மஹால் உள்ள இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக பல ஹிந்து அமைப்புகள் கூறி வருவதால், இந்த சா்ச்சைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று அவரின் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அந்த மனுவை கடந்த மே மாதம் விசாரித்த உயா்நீதிமன்றம், ரஜ்னீஷின் மனு ஊடகத்தின் கவனத்தை ஈா்ப்பதற்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ரஜ்னீஷ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தாஜ் மஹாலின் வரலாற்றை ஆராய உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும். பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்பில் தலையிட மறுத்து நீதிபதிகள் கூறியதாவது:

இந்த மனு பொது நல நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை. விளம்பரத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →