இந்தியா

குலதெய்வம் கோயிலில் இருந்து 5ஜி சேவைகளை தொடங்கும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ராஜஸ்தான் மாநிலத்தில் தனது 5ஜி சேவைகளை ஸ்ரீநாத்ஜி கோயிலில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ரிலையன்ஸ் ஜியோ ராஜஸ்தான் மாநிலத்தில் தனது 5ஜி சேவைகளை ஸ்ரீநாத்ஜி கோயிலில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் நகரத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீநாத்ஜி கோயிலில் இருந்து தனது 5ஜி சேவைகளை ஜியோ தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அம்பானி குடும்பத்தின் குல தெய்வமான ஸ்ரீநாத்ஜி கோயிலில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி 5ஜி சேவைகளை ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான 5ஜி சேவைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி சேவைகளை தொடங்குவது குறித்து ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ராஜஸ்தான் மக்களின் வாழ்க்கையை இந்த புதிய சேவை மாற்றியமைக்கும். இந்த 5ஜி சேவை அவர்களை உலகத் தரத்தில் தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்தவர்களாக மாற்றும் என்றார். 

 ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த மாதம் இந்த ஸ்ரீநாத்ஜி கோயிலில் இருந்து 5ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக கூறியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி 4ஜி சேவைகளை இதே ஸ்ரீநாத்ஜி கோயிலில் இருந்து தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT