இந்தியா

தீபாவளியன்று 18 லட்சம் அகல் விளக்குகளால் ஒளிரப்போகும் அயோத்தியா

DIN


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தீப உற்சவத்தின்போது, அயோத்தியோ நகரம் முழுக்க 18 அகல் விளக்குகளால் ஒளிரப்போகிறது.

இது மட்டுமல்லாமல், பட்டாசுகள் வெடித்தும், லேசர் விளக்கொளியிலும் மின்னுவதற்கு அயோத்தியா நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

அயோத்தியா மண்டல ஆணையர் நவ்தீப் ரின்வா கூறுகையில், சரயு ஆற்றின் கரையோரம் சுமார் 22,000 பேர் இணைந்து 15 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றவிருக்கிறார்கள்.

மூன்று லட்சம் விளக்குகள் மற்ற இடங்களில் ஏற்றப்படும். அகல் விளக்குகளை அடுக்க 256 சதுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் 256 சதுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல், லேசர் விளக்கு நிகழ்ச்சி, 3டி நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. சரயு ஆற்றுக்கு ஆர்த்தி எடுக்கும் வைபவமும் நடைபெறவிருக்கிறது.

தீப உற்சவத்தைக் கொண்டாட அயோத்தியோ நகரம் தாயராகி வருவதாக உத்தரப்பிரதேச முதல்வரும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாளை நடைபெறும் இந்த தீப உற்சவத்தை முன்னிட்டு, பிரதமா் நரேந்திர மோடி 23-ஆம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபா் 24-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அயோத்திக்கு பிரதமா் செல்கிறாா். அங்கு ராமா் கோயிலில் பூஜை செய்து வழிபட இருக்கிறாா். கோயிலில் தேவோத்ஸவம், ஆரத்தி நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்கிறாா். பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு வரும் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிடுகிறாா். சரயு நதிக்கரையில் பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும் நிகழ்ச்சியை அவா் பாா்வையிடுவாா்.

அயோத்தி பயணத்துக்கு முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற பிரதமா் மோடி, கேதாா்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு நடத்தினார். அங்கு நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT