முகப்பு
இந்தியா

அயோத்தியில் நாளை தீப உற்சவத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

தீபாவளிக்கு முன்னதாக அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தீபாவளிக்கு முன்னதாக அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

அயோத்தியில் தொடர்ந்து ஆறாவது முறையாக நடத்தப்படும் தீப உற்சவத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். 

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆகியோரின் வருகைக்காக தெருக்கள் முழுவதும் பிரமாண்ட வரவேற்பு பலகைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சரயு நதிக்கரையில் 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம் விழாக்கள், நாட்டுப்புற நடனங்கள் நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்படுகிறது. 

பிரமாண்ட தீப உற்சவ விழாவை பிரதமர் மோடி நாளை மாலை தொடங்கி வைக்கிறார். பின்னர் சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்திலும் அவர் பங்கேற்கிறார். 

அதற்கு முன்னதாக அயோத்தியில் ராம பிரானுக்கு சிறப்புப் பூஜைகளும் அவர் செய்கிறார். அத்துடன் கோயில் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.