முகப்பு
இந்தியா

பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட விவகாரம்: உ.பி.,யில் 10 பேர் கைது

உத்தரப்பிரதேச டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

உத்தரப்பிரதேச டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் டெங்கு நோயாளி பிரதீப் பாண்டே வியாழக்கிழமை பலியானார். 
ரத்த வங்கியில் பிளாஸ்மா என்று கொடுத்த பாக்கெட்டில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு சாறுதான் இருந்ததாக, நோயாளியின் உறவினர் வெளியிட்ட விடியோ வைரலானது. இந்த சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை பூட்டி சீல்வைக்கப்பட்டது. 
மேலும இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் 10 பேரை போலீசார் கைது ெசய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து போலி பிளாஸ்மா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →