இஸ்ரோ தலைவர் சோம்நாத் 
இந்தியா

சந்திராயன்-3 எப்போது விண்ணுக்குச் செல்லும்? இஸ்ரோ தலைவர் பதில்

சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். 

DIN


சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். 

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், தீபாவளி பண்டிகையை இஸ்ரோ தொடங்கிவிட்டது.  செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3  ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட 36 செயற்கைக்கோள்களில் 16  செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 20 செயற்கைக்கோள்கள் எஞ்சியுள்ளன. இதன் தகவல்கள் சற்று தாமதமாக பெறப்படும். கண்காணிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

சந்திராயன் -3 பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இறுதி ஒருங்கிணைப்பும் தேர்வும் நடைபெற்று முடிந்தது. மேலும், ஒரு சில சோதனைகளே எஞ்சியுள்ளன. சந்திராயன் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு பிப்ரவரி, ஜுன் என இரண்டு கால இடைவெளி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜுன் மாதத்தில் சந்திராயன் -3 விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT