பினராயி விஜயன் 
இந்தியா

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் கேரள ஆளுநர்: பினராயி விஜயன்

கேரள ஆளுநர்  தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

DIN


கேரள ஆளுநர்  தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், துணை வேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும்.

சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செயல்படுகிறார். கேரள பல்கலைக் கழகங்களின் கல்வி தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக?. இதன் பின்பு உள்ள அரசியல் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து கேரளத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது. 

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கேரளத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சுட்டுரையில் உத்தரவிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT