இந்தியா

ரிஷி சுனக்கும் ஆஷிஷ் நெஹ்ராவும்: வைரலாகும் புகைப்படங்கள்!

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கின் புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை தொடர்புபடுத்தி டிவிட்டரில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

DIN

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கின் புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை தொடர்புபடுத்தி டிவிட்டரில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற லிஸி டிரஸ் சில நாள்களிலேயே பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக் இன்று புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ஆஷிஷ் நெஹ்ரா புகைப்படத்தை பகிர்ந்து பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டனர்.

தோற்றத்தில் ரிஷியும், நெஹ்ராவும் ஒரே மாதிரி இருப்பதால் இருவரின் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து ரசிகர்கள் பகிரத் தொடங்கியுள்ளனர்.

ரசிகர்களின் பதிவுகள் சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் வைரலானதால் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இருவரின் புகைப்படங்களும் ஈர்த்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT