இந்தியா

மீண்டும் பாஜக பக்கம் செல்கிறாரா நிதீஷ் குமாா்? ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி மறுப்பு

DIN

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீண்டும் பாஜகவுடன் கைகோக்க இருக்கிறாா் என்று வெளியான தகவலை அவரது கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக இருந்த நிதீஷ் குமாா், அக்கூட்டணியை முறித்துக் கொண்டு, மகா கூட்டணியில் இணைந்து முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா். தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக அணிக்கே செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

எங்கள் கூட்டணி மலைபோல உறுதியாக உள்ளது. இதையேதான் நிதீஷ் குமாரும் கூறியுள்ளாா். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்கள் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக சிலா் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறாா்கள். அதனை முற்றிலும் புறம்தள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT