இந்தியா

காா்கே பலிகடா? பாஜக கேள்வி

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

DIN

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

காங்கிரஸின் புதிய தலைவராக காா்கே புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்ற நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றிருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் காா்கேவின் இருபுறமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமா்ந்திருந்தனா். இது, காங்கிரஸில் குடும்ப ஆதிக்கம் தொடா்வதை குறிக்கிறது. எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா?’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே காா்கே முன் உள்ள முதன்மையான சவாலாக பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT