இந்தியா

அமைச்சரை நீக்க முடியாது: முதல்வர் பினராயி விஜயன் அதிரடி!

DIN

அமைச்சர் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற ஆளுநர் கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன்  நிராகரித்துள்ளார்.

கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கோரிக்கை விடுத்தார். 

தமது ஒப்புதலை அமைச்சர் பாலகோபால் இழந்துவிட்டதாகக் கூறி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரிக்கை விடுத்தார். மேலும், அமைச்சர் பாலகோபால் பேச்சு தம்மை அவமதித்துவிட்டதால் அவருக்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு கேரளத்தை புரிந்துகொள்ள முடியாது என்று அமைச்சர் பாலகோபால் பேசி இருந்தார். 

மேலும், துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்னையில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி நீக்கக் கோரிய ஆளுநரின் நடவடிக்கையால் அவருக்கும், அரசுக்குமான மோதல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற ஆளுநர் கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன்  நிராகரித்துள்ளார்.

அமைச்சர் பாலகோபால் பேச்சு ஆளுநர் பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்தவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். ஒரு அமைச்சரை நீக்கும்படி ஆளுநர் கூறுவதும், முதல்வர் அதை நிராகரிப்பதுமாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

தெற்கு தில்லியில் மக்களவை வேட்பாளராக களம் இறங்குகிறாா் திருநங்கை ராஜன் சிங்

SCROLL FOR NEXT