முகப்பு
இந்தியா

அசாமில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

அசாமின் கர்பிஅங்லாங் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை அசாம் போலீசார் கைப்பற்றினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
கோப்புப் படம்
பகிர்:

அசாமின் கர்பிஅங்லாங் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை அசாம் போலீசார் கைப்பற்றினர். 

இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்து, இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல் உயர் அதிகாரி  கூறுகையில், 

திலாய் காவல் நிலையத்திற்குள்பட்ட திலாய் தினியாலியில் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

அதில் சோதனை செய்ததில் 1.263 கிலோ ஹெராயின் அடங்கிய 100 பாக்கெட் சோப் கேஸ்கள் மற்றும் ரொக்கமாக ரூ.75,000 மீட்கப்பட்டது. 

பின்னர், நால்வரையும் போலீஸ் குழு கைது செய்தது. கைதானவர்கள் டேனியல் கிதாரி (33), எம்டி சஹாபிர் அலி (57), கபானி எஸ் (22) மற்றும் சஹ்ஜன் அகமது பர்புயா (36) என அடையாளம் காணப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →