இந்தியா

2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகள்: அமித் ஷா

DIN

2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமையன்று தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) ராய்ப்பூரில் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்கு அவர் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மே 2024-க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை அமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நவ ராய்பூரில் உள்ள அடல் நகர் பகுதியில் என்ஐஏவின் ராய்ப்பூர் கிளை அலுவலக கட்டட திறப்பு விழாவில் அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து பேசியுள்ளார்.

“என்ஐஏ இப்போது சர்வதேச அளவில் ஒரு முதன்மை விசாரணை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய வீழ்ச்சிக்குப் பிறகு, நிறுவனம் அதன் அனைத்து இலக்குகளையும் அடைய முடிந்தது, ” என்று அவர் கூறினார்.

"எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும். 2019-க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடைகளை உருவாக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது" என்று அமித ஷா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT