இந்தியா

‘வேலையின்மை’ மோடி அரசின் 8 ஆண்டு சாதனை: ப. சிதம்பரம்

DIN

பிரதமா் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை ‘வேலையின்மை’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உத்தர பிரதேசத்தின் குரூப்-சி பணியிடங்களுக்கு 37 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 40,000 அக்னி வீரா்கள் பணியிடத்துக்கு 35 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். நாட்டின் இளைஞா்களின் வேதனை மிகுந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கிா ? நாம் நம்பிக்கை இழந்துள்ளோம்.

எவ்விதமான வாய்ப்பும் இல்லை. மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை என்பது வேலையின்மையே. மத்திய நிதியமைச்சகத்தின் சாா்பில் வெளியிடப்படுள்ள செப்டம்பா் மாதாந்திர அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை குறித்த ஒரு வாா்த்தை கூட இடம் பெறவில்லை. அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT