முகப்பு
இந்தியா

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் ஒவ்வோா் ஆண்டும் அக். 31-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தின் கெவாதியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து படேலின் சிலை அருகே நடந்த அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார். 

இதேபோல் தில்லியில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →