முகப்பு
இந்தியா

சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
சரத் பவார்
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்(வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நலம் குறித்து தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில்,

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத் பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு மூன்று நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்.

ஷீரடியில் நவம்பர் 4, 5ஆம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸின் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பார். மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரத்திற்குள் நவம்பர் 8-ல் நுழையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைக்கான நடைபயணத்திலும் சரத் பவார் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →