இந்தியா

இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களில் எந்த பிரச்னையும் இல்லை: போயிங் நிறுவன அதிகாரி தகவல்

இந்திய விமானப் படை பயன்படுத்தும் சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது. 

DIN

இந்திய விமானப் படை பயன்படுத்தும் சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

1960களில் இருந்தே அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சினூக் என்ற வகை ஹெலிகாப்டரில் சமீபமாக அடிக்கடி என்ஜின் தீப்பிடித்த புகார் வந்ததையடுத்து அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டது. தற்போது அமெரிக்காவிடம் 400 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

இந்தியாவிலும் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் சினூக் ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் முக்கியப் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவிடம் தற்போது 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன

மேலும், சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. 

இந்நிலையில் 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போயிங் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி சலில் குப்தே, 'இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் உள்ளன. எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், இந்தியப் படைகளால் இயக்கப்படும் ஹெலிகாப்டரில் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை. அவை செயல்பாட்டில் உள்ளன' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து அரசு அதிகாரிகள், 'அமெரிக்க ராணுவத்தின் சினூக் சிஎச்-47 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது' என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT