இந்தியா

யுனெஸ்கோவுக்கு நன்றி: கொல்கத்தாவில் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

DIN

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், மேற்குவங்கத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய அந்தஸ்து கொடுத்துள்ளது. கலாசார விழாக்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்கத்தில் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை இன்று மெகா பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். 

முன்னதாக இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருப்பு உடை, கருப்பு பொருள்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT