விஜய் - சீதா ஜோடிகளுக்குப் பிறந்த மூன்று புலிக் குட்டிகள் 
இந்தியா

விஜய் - சீதா ஜோடிக்கு பிறந்த மூன்று புலிக் குட்டிகள்

தில்லியில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் விஜய் - சீதா ஜோடிகள் மூன்று புலிக் குட்டிகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

PTI

புது தில்லி: தில்லியில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் விஜய் - சீதா ஜோடிகள் மூன்று புலிக் குட்டிகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

வெள்ளைப் புலி வகையைச் சேர்ந்த 7 வயதாகும் சீதா, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மூன்று குட்டிகளை ஈன்றது. தாய் உள்பட குட்டிகள் ஒரு மாத காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டு பராமரிப்பில் வைக்கப்படும். இந்தக் குட்டிகளின் தந்தை அதே வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 வயத வெள்ளை நிற புலியாகும்.

கடந்த 2020 டிசம்பர் மாதம் வெள்ளைப் புலி குட்டிகளை ஈன்றபோது, புலியும், அதன் மூன்று குட்டிகளும் மரணமடைந்தன. தற்போது இந்த பூங்காவில் இரண்டு ஜோடி வெள்ளைப் புலிகள் உள்ளன. நான்கு மேற்குவங்க புலிகள் உள்ளன. இவற்றில் ஒரு ஆண் புலியும், மூன்று பெண் புலியும் அடங்கும்.

பொதுவாக வெள்ளைப் புலிகளின் ஆயுள் காலம் என்பது 12 முதல் 14 ஆண்டுகளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT