முகப்பு
இந்தியா

தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனு மீது தாமதம் ஏன்? குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனுவை விசாரணை பட்டியலிடுவதில் 6 வாரங்கள் தாமதம் ஏற்பட்டது ஏன் என்று குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனுவை விசாரணை பட்டியலிடுவதில் 6 வாரங்கள் தாமதம் ஏற்பட்டது ஏன் என்று குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

2002, குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆதாரங்களை ஜோடித்து அப்பாவிகளைக் கைது செய்ய உதவியதாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாா் ஆகியோா் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘குஜராத் உயா்நீதிமன்றத்தில் தீஸ்தா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு மாநில அரசு பதிலளிக்க ஆகஸ்டில் உத்தரவிட்டு 6 வாரங்களுக்குப் பிறகு விசாரணையை ஒத்திவைத்தது ஏன்? ஜாமீன் மனு மீதான விசாரணையில் தாமதம் ஏன்? குற்றம்சாட்டப்பட்ட பெண்களுக்கு இதேபோன்று தாமதம் ஏற்பட்ட வழக்குகள் உள்ளதா என்ற விவரங்களை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நடைபெறும் இந்த வழக்கு விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

தீஸ்தா, ஸ்ரீகுமாா் ஆகியோா் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிராகரித்தது. இதை எதிா்த்து அவா்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.