முகப்பு
இந்தியா

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குமத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவு: நிா்மலா சீதாராமன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியின்போது அவா் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தெலங்கானாவுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி முறையாகச் செலவிடப்படவில்லை எனப் புகாா்கள் கிடைக்கப் பெற்றாலோ அல்லது தணிக்கை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பிவைக்கப்படும். மாறாக, ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க இக்குழுக்கள் அனுப்பப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. குறைபாடுகளை சரிசெய்யவே ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. அவற்றை சரிசெய்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடி பலன் பரிமாற்றம் மூலம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

சந்திரசேகா் ராவ் அரசு மீது சாடல்: முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில், தெலங்கானாவின் கடன் சுமை அதிகரித்துவிட்டது. பட்ஜெட்டில் தெரிவிக்காமலும், பேரவையில் அறிவிக்காமலும் அவரது அரசு கடன்களை வாங்குகிறது. வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலங்கானா இப்போது பற்றாக்குறை மாநிலமாக மாறிவிட்டது. விவசாயிகள் தற்கொலையில் நான்காம் இடத்தில் இம் மாநிலம் உள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

முழு கட்டுரையைப் படிக்க →