இந்தியா

ராஜஸ்தான் ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்: அசோக் கெலாட்

DIN

ராஜஸ்தான் ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் அனைத்து விதமான வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்மீகம் சார்ந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் அசோக் கெலாட் இதனை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: “ராஜஸ்தான் மாநில அரசு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் செய்து வருகிறது. அரசின் முக்கிய நோக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை ஆன்மீக சுற்றுலாத் தலங்களின் மையமாக மாற்றுவதே ஆகும். மாநிலத்தில் உள்ள அனைத்து மதம் சார்ந்த சுற்றுலாத் தலங்களும் அழகுப்படுத்தப்படும். அந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மதம் சார்ந்த விழாக்களில் அரசு வெளியிடும் அனைத்து விதமான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான விதத்தில் செயல்படுத்தப்படும். மதம் சார்ந்த நிகழ்வுகளில் வேறு ஏதேனும் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஆலோசனைகளை மதம் சார்ந்த தலைவர்கள் வழங்கலாம். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் பக்தர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும்.” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT