இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க தில்லி செல்கிறாரா நிதீஷ் குமார்?

DIN

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக பிகார் முதல்வர் நிதீஷ் குமார்  வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

தனது தில்லி பயணத்தின்போது நிதீஷ் குமார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம் சார்பில் தேதிய நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முதல் முறையாக தில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT