இந்தியா

கா்நாடக மடாதிபதி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

DIN

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, ‘மடாதிபதியிடம் சட்டத்தின்படி விசாரணையை மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

அதன்படி, சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மடாதிபதியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியான மடத்தின் செயலாளர் பரமசிவய்யா மற்றும் இளைய மடாதிபதியின் முன்ஜாமீன் மனுக்கள் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT