இந்தியா

தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் கொடுத்துள்ளனர்: மணீஷ் சிசோடியா

DIN

தில்லி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்துள்ளனர் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அவர்களுடைய வாழ்வில் முன்னேற்றம் காண அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அயராது உழைத்து வருகிறார்கள். இது அவர்கள் மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தினம் நாளை (செப்டம்பர் 5) கொண்டாட உள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மணீஷ் சிசோடியா இதனை தெரிவித்தார். 

அந்த நிகழ்வில் மணீஷ் சிசோடியா பேசியதாவது: “தில்லியின் கல்வி புரட்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது. கல்விப் புரட்சியில் ஆசிரியர்கள் முன்னின்று கொடியினை ஏந்திச் செல்பவர்களாக உள்ளனர். நமது கல்விப் புரட்சியினை தில்லி மட்டும் பாராட்டவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் தில்லியில் பின்பற்றப்படும் கல்விக் கொள்கைகள் குறித்து வியந்து பேசுகின்றது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தான் அரசின் கல்விக் கொள்கைகளை பள்ளிகளில் திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். அவர்களால் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்கிறது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT