இந்தியா

விடிய விடிய கனமழை: மழைநீரில் மிதக்கும் பெங்களூரு!

DIN

பெங்களூருவில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் அந்த நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 

பெங்களூருவில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மூன்று நகரங்களில் 125 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பெங்களுருவில் சராசரியாக 131 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவில் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், மக்கள் முடிந்தவரை இன்று வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதுபோல மழை காரணமாக பெங்களூரு விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT