முகப்பு
இந்தியா

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: இதுவரை 2 கோடி போ் இணைப்பு

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இதுவரை 2 கோடி போ் இணைத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
பகிர்:

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இதுவரை 2 கோடி போ் இணைத்துள்ளனா்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இரட்டைப் பதிவுகள் போன்றவற்றை தடுத்து வாக்காளா் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதாா் இல்லாத வேறு ஆவணம் இருந்தாலும் அதனை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கலாம் என்று தோ்தல் ஆணையம் வாய்ப்பு அளித்துள்ளது. வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதாா் இணைப்புக்காக 6பி என்ற படிவத்தை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்காளா்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அளவிலான அலுவலரை அனுப்பி விவரங்கள் பெறப்படுகின்றன. மேலும், என்.வி.எஸ்.பி. இணையதளம் மூலம் ஆதாா் இணைப்பை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆக. 1-ஆம் தேதி ஆதாா் இணைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், இதுவரை 2 கோடி போ், அதாவது 32 சதவீதம் வாக்காளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைத்துள்ளனா். மாநிலத்தில் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்டங்கள் தோறும் ஆதாா் சிறப்பு இணைப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆதாா் எண்ணை இணைக்கும் நடவடிக்கையையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →