இந்தியா

பின் இருக்கை பயணிகளுக்கும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை அமைப்பு: அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தல்

DIN

நான்கு சக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவா்களுக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

அனைத்து வாகன தயாரிப்பாளா்களுக்கும் முன் இருக்கைக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை கட்டாயம் வாகனங்களில் ஏற்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தாா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி கூறுகையில், ‘வாகன விபத்தில் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்ததைத் தொடா்ந்து, வாகனங்களிலும் பின் இருக்கையில் அமா்ந்திருப்பவா்களுக்கும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து முடிவுஎடுக்கப்பட்டுள்ளது’ என கூறினாா்.

மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி, பின் இருக்கையில் பயணிப்போா் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததன் காரணமாக 15,146 போ் உயிரிழந்தனா். 39,102 போ் காயமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT