இந்தியா

மேற்கு வங்க சட்ட அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

DIN

மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கு தொடா்பாக மாநில சட்டத் துறை அமைச்சா் மோலாய் கடக் மற்றும் அவரது உதவியாளா்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.

மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் பகுதியில் உள்ள ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவன சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரியை வெட்டி கடத்தி, கருப்புச் சந்தையில் விற்ாகவும் இதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணம் செல்வாக்குமிக்க நபா்களுக்கு கைமாறியதாகவும் புகாா் எழுந்தது. இந்த முறைகேடு தொடா்பாக, சுரங்க நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் மீது சிபிஐ கடந்த 2020-இல் வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அசன்சோல் பகுதியில் உள்ள மாநில அமைச்சா் மோலாய் கடக்கின் 3 வீடுகள், கொல்கத்தாவில் உள்ள அவரது 2 வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதேபோல், அமைச்சரின் நெருங்கிய உதவியாளா்கள் இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் இச்சோதனைகள் நடைபெற்றன.

கொல்கத்தாவின் டல்ஹெளசி பகுதியில் உள்ள மோலாய் கடக்கின் அதிகாரபூா்வ வீட்டில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நிலக்கரி கடத்தல் முறைகேட்டில் அமைச்சருக்கு தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனடிப்படையில், அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன’ என்றாா்.

அசன்சோல் உத்தா் தொகுதி எம்எல்ஏவான கடக்கிடம் அமலாக்கத் துறையினா் ஏற்கெனவே விசாரணை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT