'ராகுல் இந்தியா இணைப்புக்கு பதிலாக காங்கிரஸ் இணைப்பு நடைப்பயணம் மேற்கொள்ளலாம்'
பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்தியா இணைப்பு நடைப்பயணம் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமரிசித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
புது தில்லி: பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்தியா இணைப்பு நடைப்பயணம் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமரிசித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
ராகுல் காந்தி, இந்தியா இணைப்பு நடைப்பயணத்துக்கு பதிலாக, காங்கிரஸ் இணைப்பு நடைப்பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று அத்வாலே கூறியிருக்கிறார்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கூறுகையில், இந்தியாவை ஒன்றிணைக்கும் பணியைத்தான் பிரதமர் நரேந்திர மோடி செய்து வருகிறார்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
எனவே, இந்தியா இணைப்பு நடைப்பயணத்துக்கு மாற்றாக, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்கும் நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம். நாட்டை ஒன்றிணைக்க அல்ல, அரசை உடைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார் என்றே நினைக்கிறேன் என்றும் அத்வாலே குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், அத்வாலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.